நிறம் மாறிய குடிநீர்: தரமாவது எப்போது?
குடிநீர் தட்டுப்பாடுபல்லடம், மாதப்பூர், செந்தில் நகரில் குழாய் அமைத்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் குடிநீர் கிடைக்கவில்லை. மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.- பிரவீன்குமார், செந்தில் நகர்.ஆக்கிரமிப்பு கடைகள்திருப்பூர், 17வது வார்டு, எம்.எஸ்., நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.- ரஞ்சித், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)ஒளிராத விளக்குகள்திருப்பூர், ஏ.பி.டி., ரோடு - உழவர் சந்தை சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.- மணியம், ஏ.பி.டி., ரோடு. (படம் உண்டு)கழிவுநீர் அடைப்புதிருப்பூர், அம்மன் நகர், தாய்தமிழ் பள்ளி சாலையில் கால்வாய் கட்ட வேண்டும். கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடுகிறது; சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- தங்கமணி, அம்மன் நகர். (படம் உண்டு)நிறம் மாறிய குடிநீர்திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் நிறம் மாறி வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. புழுக்கள் மிதக்கிறது. மாநகராட்சி கவனிக்க வேண்டும்.- பரமசிவம், நெருபெரிச்சல். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், தாராபுரம் ரோடு, தெய்வானையம்மாள் லே-அவுட் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- கோமதி, தெய்வானையம்மாள் லே-அவுட். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர் நேரு வீதி, காவேரியம்மன் திருமண மண்டபம் முன் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- வின்சென்ட்ராஜ், நேரு வீதி. (படம் உண்டு)திருப்பூர், குமார் நகர், இ.பி., ஆபீஸ் பின்புறம், இரண்டாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- ஈஸ்வரன், குமார் நகர். (படம் உண்டு)திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் - மில்லர் ஸ்டாப் இடையே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- தேவராஜன், மேட்டுப்பாளையம். (படம் உண்டு)மழைநீரால் அவதிதிருப்பூர், 15 வேலம்பாளையம் வாராந்திர சந்தையில் மழைநீர் வடிகால் முறையாக இல்லை. சிறிய அளவில் மழை பெய்தாலும், மழைநீர் தேங்கி நிற்கிறது.- விஜி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)போர்வெல் பழுதுகுன்னத்துார், கன்னிபாளையத்தில் போர்வெல் குழாய் பழுதாகியுள்ளது. தண்ணீர் வருவதில்லை. போர்வெல் ஆழப்படுத்தி, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.- சந்திரன், கன்னிபாளையம். (படம் உண்டு)மாநகராட்சி கவனத்துக்குதிருப்பூர், கல்லம்பாளையத்தில் வடிகால் பணி தாமதமாகியுள்ளது. கழிவுநீர் தேங்கி வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டி வரை வந்து சேர்கிறது. மாநகராட்சி கவனிக்க வேண்டும்.- கரண், கல்லம்பாளையம். (படம் உண்டு)சறுக்கும் சாலைநெருப்பெரிச்சல், கருப்பராயன் கோவில் முன்புறம் சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். பேட்ஜ்ஒர்க் மேற்கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.- கன்னியப்பன், நெருப்பெரிச்சல். (படம் உண்டு)குழியான சாலைதிருப்பூர், பூலுவப்பட்டி நால்ரோடு சிக்னல் சந்திப்பில் கேட்வால் அருகே சாலை குழியாகியுள்ளது. சிக்னலில் இருந்து முன்னேறுபவர்கள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.- சந்தோஷ்குமார், பூலுவப்பட்டி. (படம் உண்டு)சறுக்கும் சாலைநெருப்பெரிச்சல், கருப்பராயன் கோவில் முன்புறம் சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். பேட்ஜ்ஒர்க் மேற்கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.கன்னியப்பன், நெருப்பெரிச்சல்.குழியான சாலைதிருப்பூர், பூலுவப்பட்டி நால்ரோடு சிக்னல் சந்திப்பில் கேட்வால் அருகே சாலை குழியாகியுள்ளது. சிக்னலில் இருந்து முன்னேறுபவர்கள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.சந்தோஷ்குமார், பூலுவப்பட்டி.