உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி ..

தாறுமாறாக நிற்கும் வாகனங்கள்

விழுப்புரம் எம்.ஜி., சாலையில் சரக்கு வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.- அஞ்சலைதேவி, விழுப்புரம்.

பன்றிகள் தொல்லை

விழுப்புரம் வண்டிமேடு, ராகவேந்திரா கோவில் மற்றும் அமீனா நகரில் பன்றிகள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- அருள், விழுப்புரம்.

குண்டும், குழியுமான சாலை

ஆனாங்கூர் கிராம சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.- சந்தோஷ், ஆனாங்கூர்.

சமூக விரோதிகளின் கூடாரம்

விழுப்புரம், மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் பாழடைந்த வீடுகள் அகற்றப்படாததால் மர்ம நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது.- சீத்தாராமன், விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை