புகார் பெட்டி..
கழிவுநீரால் துர்நாற்றம் விழுப்புரம் ஊரல்கரைமேடு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. - சிவகாமி, விழுப்புரம் போதை ஆசாமிகள் அட்டூழியம் வீடூர் அணைக்கட்டு பகுதியில் போதை ஆசாமிகள் குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்வதால் அவ்வழியே செல்வோர் கண்ணாடி குத்தி காயமடைகின்றனர். -விக்ரமன், விக்கிரவாண்டி மாடுகளால் விபத்து விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் மாடுகள் மேய்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். - கோபிநாத், விழுப்புரம் பார்கிங்காக மாறிய நடைமேடை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நடைமேடையில் பலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி பார்க்கிங்காக மாற்றியதால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். - பாலா, விழுப்புரம்