மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி
காஞ்சிபுரம், புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 62; விவசாயி. இவர், நேற்று முன்தினம், மதியம் 2:00 மணி அளவில், 'டி.வி.எஸ்., எக்ஸ்எல்' இருசக்கர வாகனத்தில், வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளார்.வீட்டருகே மயங்கி விழுந்தவர், தலையில் காயம் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைக்கு, தண்டலம் தனியார் மருத்துவமனையில் கேசவனை சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார். பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.