உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஊக்கத்தொகைக்கு கட்டை போடும் பெண் அதிகாரிகள்!

ஊக்கத்தொகைக்கு கட்டை போடும் பெண் அதிகாரிகள்!

இஞ்சி டீயை உறிஞ்சிய படியே, ''வெளிநாட்டுல இருந்தாலும், தொகுதியை மறக்கலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்தும், கேரள காங்., மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் நல்ல நண்பர்கள்... சமீபத்துல, நாகர்கோவில் தனியார் கல்லுாரி மாணவர்கள், 39 பேர் கேரளாவின் மூணாறுக்கு டூர் போயிருந்தாங்க...''அங்க, பஸ் கவிழ்ந்து மூணு மாணவர்கள் இறந்துட்டாங்க... சில மாணவர்கள் படுகாயங்களுடன், பக்கத்துல இருந்த தமிழகத்தின் தேனி மருத்துவமனையில சேர்க்கப்பட்டாங்க... தங்களது குடும்ப தொழில் சம்பந்தமா ஜப்பானுக்கு போயிருந்த விஜய் வசந்துக்கு விபத்து தகவல் கிடைச்சதும், ரமேஷ் சென்னிதலாவுக்கு பேசியிருக்காருங்க...''அவர் வழியா, மூணாறுகம்யூ., - எம்.எல்.ஏ., ராஜாவை தொடர்பு கொண்டு பேசி, மாணவர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லியிருக்காரு... தேனி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் தி.மு.க., - எம்.பி., தங்க தமிழ்செல்வனுக்கும் பேசி, மாணவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உதவிகள் செய்யும்படி சொல்லி இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.உடனே, ''மதுரை மாநகர் தி.மு.க., செயலர் தளபதி, உடல்நல குறைவால சென்னை தனியார் மருத்துவமனையில சேர்ந்திருக்காரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''அவரை, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சமீபத்துல பார்த்து அரை மணி நேரம் பேசிட்டு இருந்திருக்காரு... அழகிரி, தி.மு.க.,வுல இருந்தப்ப, ரெண்டு பேரும் சேர்ந்து கட்சி பணிகளை செஞ்சிருக்காவ... அந்த பழைய கதைகளை எல்லாம் தளபதியிடம் பேசிய அழகிரி, அவரை உற்சாகப்படுத்திட்டு போயிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.''ஊக்கத்தொகை வழங்க முட்டுக்கட்டை போடறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''துணை முதல்வர் உதயநிதி கட்டுப்பாட்டுல தான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வரது... சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டி களில் வெற்றி பெறுவோருக்கு, இத்துறை சார்பில், 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை, உயரிய ஊக்கத்தொகையா வழங்கறா ஓய்...''ஆனா, இந்த ஊக்கத் தொகை வழங்க பெண் அதிகாரிகள் இருவர் பாரபட்சம் பார்த்து, தடை போடறாங்க... இதுல ஒருத்தர் வாலிபால், மற்றொருவர் கூடைப்பந்து வீராங்கனையா இருந்து இந்த பதவிக்கு வந்திருப்பதால, அந்த விளையாட்டுகள்ல வெற்றி பெற்றவாளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கறா ஓய்...''மற்ற விளையாட்டுகளை கண்டுக்க மாட்டேங்கறா... ஒவ்வொரு விளையாட்டிலும் உதவித்தொகை கேட்டு, 100க்கும் மேற்பட்டவா ரெண்டு வருஷமா காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.பெஞ்சில் இருந்து எழுந்த அந்தோணிசாமி, ''சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில், பேராசிரியை ஒருவருக்காக விதிகள் வளைக்கப்படுறதா பேசியிருந்தோமே... ''ஆனா, கல்லுாரியில் காலியா இருக்கிற பயிற்றுனர் பணியிடங்களுக்கு, எம்.பி.ஏ., முடிச்சிருக்கணும் என்ற நிபந்தனை இருந்துச்சு... இப்ப, அனைத்து பணிகளுக்கும் பயிற்சி அளிக்கிறதால, முதுகலை பட்டம் பெற்றவங்களும் விண்ணப்பிக்கலாம்னு அறிவிச்சிருக்கோம்... இது, தனிப்பட்ட யாருக்காகவும் எடுத்த நடவடிக்கை இல்ல...''முறைப்படி விண்ணப்பங்கள் வாங்கி, குழு அமைத்து தகுதியானவங்களை தான் பணி நியமனம் பண்ண இருக்கோம்... இதுல எந்த விதிமீறலும் இல்லன்னு கல்லுாரி நிர்வாகம் தரப்புல சொல்றாங்க...'' என, முடித்தார்.தலையை ஆட்டிய படியே நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ