உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சிக்னல்கள் பழுது வாகன ஓட்டிகள் பீதி

சிக்னல்கள் பழுது வாகன ஓட்டிகள் பீதி

செங்குன்றம்,செங்குன்றம், புழல் ஏரிக்கரை அருகே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜி.என்.டி., சாலை சந்திப்பு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. சென்னை-யில் இருந்து ஆந்திரா செல்லும் அனைத்து வாகனங்களும், இந்த சந்திப்பைக் கடத்து தான் சென்று, வர வேண்டும்.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, அங்குள்ள சிக்னல் இயங்காமல் உள்ளது.மற்றொரு சிக்னல், கனரக வாகனம் மோதி சேதமடைந்து, கீழே விழுந்துள்ளது. இதனால், கட்டுப்பாடின்றி செல்லும் வாகனங்கள், மேற்கண்ட சந்திப்பில் விபத்தில் சிக்குகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலும் நீடிக்கிறது.இவற்றை கண்காணித்து சீரமைக்க வேண்டிய போக்குவரத்து போலீசாரை, அங்கு பார்க்க முடிவதில்லை. சாலை விளக்கும் இல்லாத நிலையில், மழை நேரத்தில் நிலைமை மேலும் மோசமாகிறது.பெரிய விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்க, செங்குன்றம் போக்குவரத்து போலீசார் இங்குள்ள சிக்னல்களை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி