உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஊராட்சி தலைவி கணவரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் தலைமறைவு

ஊராட்சி தலைவி கணவரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் தலைமறைவு

மேல்மருவத்துார்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கிளியாநகர் ஊராட்சி தலைவியான சித்ரா, தன் கணவர் சுரேஷை, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய துணை செயலர் தேவ், 50, என்பவர் தாக்கியதாக, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பின் கூறியதாவது:நேற்று முன்தினம், ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் டேங்க் பைப் வால்வுகளை, பணியாளர்களுடன் சரி செய்து கொண்டிருந்த சுரேஷிடம், மேல்மருவத்துார் போலீசார், வேறொரு வழக்கு சம்பந்தமாக, சம்மன் வழங்க ஒரு நபரை பற்றி விசாரித்துள்ளனர்.இது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும், தி.மு.க., ஒன்றிய துணைச் செயலரான தேவ்விடம் கேட்கக் கூறியும், சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.அதன்படி, போலீசார் தேவ்விடம் விசாரித்தனர். போலீசார் சென்ற பின், சுரேஷ் வேலை செய்த பகுதிக்கு வந்த தேவ், சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.இதில், இடது கையில் காயம் ஏற்பட்ட சுரேஷ் மயங்கினார். சுரேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.சுரேஷை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள தேவ் என்பவரை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ