உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வண்டலுார் உயிரியல் பூங்காவில் 5 கி.மீ., வனத்தில் மினி மாரத்தான்

வண்டலுார் உயிரியல் பூங்காவில் 5 கி.மீ., வனத்தில் மினி மாரத்தான்

தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரம் வன விலங்குகள் வாரமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, வரும் 5ம் தேதி, 5 கி.மீ., துாரத்திற்கு வன உயிரின தட ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்போர், வனப்பகுதி வழியாக ஓடுவர். இந்த ஓட்டம், வண்ட லுார் வனப்பகுதியில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்போர், பூங்காவின் கூடுதல் வாகன நிறுத்துமிடத்தில் கூட வேண்டும். வருகை பதிவு, காலை 5:30 மணி. டி - சர்ட் வினியோகம் காலை 5:00 மணிக்கு துவங்கும். ஓட்டம் அதிகாரப்பூர்வமாக காலை 7:00 மணிக்கு துவங்கும். இந்த ஓட்டத்தில், 800 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது, நான்கு பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதுக்கு உட்பட்டோர், 250 ரூபாய் கட்டணம், 18 வயதுக்கு மேற்பட்டோர், 700 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். ஆண், பெண் என, இரு பிரிவுகளில், வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பையுடன், பூங்காவிற்கான இலவச அனுமதியும் வழங்கப்படும். இந்த நிகழ்வில் பங்கேற்க, https://www.aazp.in/wildrun-2025 என்ற மின் அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். இது, இயற்கையை கொண்டாடவும், வன விலங்கு பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை