உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தினமும் ஆயிரங்களை, அள்ளும் பெண் போலீஸ் அதிகாரி!

தினமும் ஆயிரங்களை, அள்ளும் பெண் போலீஸ் அதிகாரி!

போகி புகைக்கு மத்தியில் பெஞ்சில் ஆஜரான அந்தோணிசாமி, ''தேசிய தலைவருக்கு சிக்கல் வந்திருக்குதுங்க...'' என, மேட்டரை ஆரம்பித்தார்.''யாருப்பா அந்த தலைவர்...'' என, கேட்டார் அன்வர்பாய்.''பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை, தேசிய தலைவர் என்ற சினிமா படமா எடுத்திருக்காங்க... படத்தின் எல்லா பணிகளும் முடிஞ்சு, சென்சாருக்கு போக இருந்த சூழல்ல, தயாரிப்பாளர்களான கோவிந்த ராஜன், எம்.எம்.பாபு மற்றும் எஸ்.எஸ்.சத்யா இடையே ஏற்பட்ட மோதலால், புது சிக்கல் ஏற்பட்டிருக்குதுங்க...''அதாவது, இந்த படத்துல தேவரா நடிச்சிருக்கிற, ஜெ.எம்.பஷீர், இப்ப, தி.மு.க.,வுல இருக்காரு... தயாரிப்பாளர், எம்.எம்.பாபு, பன்னீர்செல்வம் அணியிலும், மற்றொரு தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சத்யா, பழனிசாமி அணியிலும் இருக்காங்க...''படத்தின் சென்சார் சான்றிதழை, ஒருத்தர் பெயருக்கு மட்டுமே தர முடியும்கிறதால பாபுவும், சத்யாவும் தன் பெயர்ல தான் சான்றிதழ் வேணும்னு போர்க்கொடி துாக்கியிருக்காங்க... இந்த பஞ்சாயத்தால படம் வெளியாகுறது தள்ளி போகுதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''பாலியல் வழக்குல போலீசார் அடக்கி வாசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''அண்ணா பல்கலை மேட்டர் தானே பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''இல்ல... துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் நகர, தி.மு.க., முக்கிய புள்ளி, தன் கடையில் வேலை பார்த்த விதவை பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி, ரெண்டு வருஷமா நெருங்கி பழகியிருக்கார்... ஒரு நாள் அவரது மொபைல் போனை, அந்த பெண் எடுத்து பார்த்ததுல, நிறைய பெண்களுடன், அந்த, தி.மு.க., புள்ளி நெருங்கி பழகிய படங்களை பார்த்து அதிர்ச்சி ஆகிட்டாங்க ஓய்...''தன்னை ஏமாத்திட்டதா, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் குடுத்தாங்க... ஆனாலும், போலீசார் உதவியுடன், 'பஞ்சாயத்து' பேசிய, தி.மு.க., புள்ளி, அந்த பெண்ணுக்கு, 3 லட்சம் ரூபாய் குடுத்து, பிரச்னையை, 'சால்வ்' பண்ணிட்டார் ஓய்...''இதுக்கு மத்தியில, தி.மு.க., புள்ளிக்கு ஆதரவா, அவரது கட்சி மற்றும் சில, காங்., நிர்வாகிகள், விதவை பெண்ணை மிரட்டியிருக்கா... இதனால வெறுத்து போன அந்த பெண், எஸ்.பி., ஆபீஸ்க்கு போய், 'தி.மு.க., புள்ளியுடன் என்னை சேர்த்து வையுங்கோ'ன்னு முறையிட்டிருக்காங்க... இப்ப, தி.மு.க., புள்ளி மீது வழக்கு மட்டும் பதிவு பண்ணிட்டு, கைது நடவடிக்கை எடுக்காம போலீசார் கமுக்கமா இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தினமும் ஆயிரக்கணக்குல அள்ளிடுதாங்க...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வர்ற போலீஸ் அதிகாரிகளையும், அவங்க உறவினர்களையும் சிறப்பு தரிசன வழியில கூட்டிட்டு போக, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை நியமிச்சிருக்காவ... இந்த பெண் அதிகாரியின் கணவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்துதாரு வே...''இவர், தினமும், 50 பக்தர்களையாவது, 'போலீசார் குடும்பம்'னு சொல்லி, சிறப்பு தரிசன வரிசையில கூட்டிட்டு போயிடுதாரு... இதுக்காக, அந்த பக்தர்களிடம் தனியா பணம் வசூலிச்சிடுதாரு வே...''இப்படியே, தினமும் சில ஆயிரங்களை அள்ளிடுதாவ... இதுக்கு உள்ளூர் புரோக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்காம இருக்க, அவங்களது பக்தர்களையும் பெண் அதிகாரி, கேள்வியே கேட்காம சிறப்பு வழியில அனுப்பிடுதாங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 13, 2025 10:45

எத்தனை ஆயிரங்களை அள்ளினாலும், அள்ளறது அம்பூட்டும் அம்மணிக்கு சேராது. அள்ளினதை மேலிடத்துக்கு கொடுக்கணும், இவங்க அள்ளினதுல மேலிடமா பாத்து கிள்ளிக்கொடுக்கும். அவ்வளவுதான்.


D.Ambujavalli
ஜன 13, 2025 06:22

அதைப்போல் எத்தனையோ 'புள்ளிகள்' எல்லாக் காட்சிகளிலும் இருக்கிறார்கள் 'கல்யாணம் பண்ணி முடி, அப்புறம் பார்க்கலாம்' என்று சொல்லாமல், நாளைக்கு வரும் பலாக்காய்க்காக இன்று பெரிய விலை கொடுத்தால், இதுதான் கதி 'என்னய்யா அநியாயம், ஒரு கள்ளச்சாராய கேசுக்குத்தரும் மதிப்புக்கூட இல்லாமல் 3 லட்சத்தை வீசி இருக்கிறாயே ' என்று அந்தப்பெண்மணி கலாட்டா செய்ய வேண்டாமா ?


Anantharaman Srinivasan
ஜன 13, 2025 15:09

3 லட்சம் போதாமையால் தான் அந்த பெண், எஸ்.பி., ஆபீஸ்க்கு போய், தி.மு.க., புள்ளியுடன் என்னை சேர்த்து வையுங்கோன்னு முறையிட்டிருக்காங்க...


புதிய வீடியோ