உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அரசு காரை திருப்பி தர மறுக்கும் போலீஸ் அதிகாரி!

அரசு காரை திருப்பி தர மறுக்கும் போலீஸ் அதிகாரி!

க ருப்பட்டி காபிக்கு, ‘ஆர்டர்’ தந்தபடியே, “ஊருக்குள்ள தேர் வந்தும் உள்ளூர் எம்.எல்.ஏ., வரல வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “எந்த ஊருலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி. “காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் புத்தகரம் கிராமம் இருக்கு... இங்க இருக்கிற முத்து கொளக்கியம்மன் கோவிலுக்கு, ஹிந்து அறநிலைய துறை சார்பில் புதுசா தேர் செஞ்சிருக்காவ... இந்த தேர், அதே ஊர்ல இருக்கிற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக் கு ம் போகணும்னு, உயர் நீதிமன்றம் உத் தரவு போட்டிருக்கு வே... “இந்த உத்தரவை அமல்படுத்தாம ஒரு வருஷமா அதிகாரிகள் இழுத்தடிச்சாவ... வி.சி., கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தியதால, ஒருவழியா நாலு நாளைக்கு முன்னாடி, தேருக்கு வெள்ளோட்டம் நடத்தினாவ வே... “அப்ப, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் தேர் வந்துச்சு... இதுல, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ரஞ்சித்குமார், தென்னரசு எல்லாம் கலந்துக்கிட்டாவ... ஆனா, உத்திரமேரூர் த.வெ.க., – எம்.எல்.ஏ., முனிரத்னம், கலெக்டர் சினேகா ஆகியோர் புறக்கணிச்சிட்டதால, அந்த பகுதி மக்கள் வருத்தத்துல இருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “கட்டாயமா பணம் வசூலிக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “தமிழகத்துல புது ரேஷன் கார்டுகளுக்கு, பொது வினியோக திட்ட இணையதளத்துல ஆதார் எண், சமையல் காஸ் சிலிண்டர் ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கணும்... அரசின் எல்லா இலவச திட்டங்களுக்கும், ரேஷன் கார்டு மூலமா தான் பயனாளிகளை தேர்வு செய்யறா ஓய்... “அதனால, விண்ணப்பங்களை பல கட்ட ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதியானவாளுக்கு மட்டும் தான் ரேஷன் கார்டு தரா... இதனால, கார்டுகள் வழங்க, ‘லேட்’டாறது ஓய்... “அதேநேரம் கார்டு கேட்டு விண்ணப்பிச்சவா, வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு போய் கேட்டா, ‘முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கறோம்... அதுக்கு மொபைல் போன் வழியா பணம் அனுப்புங்கோ’ன்னு அதிகாரிகள் கேக்கறா ஓய்... “பணம் அனுப்ப மறுத்தா, ரேஷன் கார்டு விண்ணப்பங்களின் நிலை குறித்து சரியான பதில் தர மாட்டேங்கறா... அதோட, புது கார்டுகள் வழங்காமலும் இழுத்தடிக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா. “அரசு காரை தராம போக்கு காட்டுறாரு பா...” என்றார் அன்வர்பாய். “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி. “சென்னை, வண்ணாரப்பேட்டை போலீஸ் மாவட்டத்துல, புது வண்ணாரப்பேட்டை ஸ்டேஷன் வருது... இந்த ஸ்டேஷன் குற்றப்பிரிவுல அதிகாரியா இருந்தவரை, தேர்தலுக்கு பிறகு வடக்கு மண்டல உளவுத்துறைக்கு மாத்தினாங்க பா... “அந்த பணிக்கு போன அதிகாரிக்கு, ‘டாடா சுமோ கார்’ குடுத்தாவ... ஆனா, உளவுத்துறைக்கு போன சில நாட்கள்லயே, அயல்பணியா வேற இடத்துக்கு அதிகாரி போயிட்டாரு பா... “போனவர், டாடா சுமோவையும் கையோட எடுத்துட்டு போயிட்டாரு... ஆறு மாசங்களாகியும், காரை திருப்பி தராம அவரே பயன்படுத்திட்டு இருக் காரு... இதனால, உளவுத் துறை போலீசார் கார் இல்லாம சிரமப்படுறாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய். “பொன் திலகராஜ், நாளைக்கு பார்க்கலாம் ஓய்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
அக் 29, 2026 19:09

அரசு அளித்த. காரை. ஆன மட்டும். - சுற்றுலா, குடும்ப நிகழ்சசிகள். - என்று. கெத்தாக. உபயோகிக்கலாமே என்று. மேலதிகாரிகளின். உத்தரவு. வரும். வரை. இழுத்தடிக்கிறார். போலிருக்கிறது.


Anantharaman Srinivasan
அக் 29, 2026 15:30

ஆறு மாசங்களாகியும், அரசு காரை திருப்பி தர மறுக்கும் போலீஸ் அதிகாரியை ஏன் அவருக்கு மேலுள்ள அதிகாரிகளும் Director General of police சும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்..?


Anantharaman Srinivasan
அக் 29, 2026 15:24

புது ரேஷன் கார்டு விநியோகம் செய்யுமிடத்தில் முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க மொபைல் போன் வழியே பணம் செலுத்த வேண்டுமா..? தமிழகயரசு வசூல் செய்ய சுற்றறிக்கை அனுப்பியுள்ளதா அல்லது லஞ்சம் வாங்க மாற்றுவழியா..?


S.V.Srinivasan
அக் 29, 2026 10:37

லஞ்சம், ஊழல், தகிடுதத்தம் வேலைகளில் த வெ க, திராவிட மாடலுக்கு சளைத்தது அல்ல என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகி வருகிறது. பதவி ஏற்றவுடன் பேசிய முதல்வரின் ஆவேச அதிரடிகளெல்லம் செய்தியோட இருக்கு. செயலில் காணவில்லை.