உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  மாணவர்களிடம் நுாதனமாக கொள்ளை அடிக்கும் பள்ளி!

 மாணவர்களிடம் நுாதனமாக கொள்ளை அடிக்கும் பள்ளி!

நாட்டு சர்க்கரை டீயை பருகியபடியே, “எல்லை தாண்டி, அமைச்சர்களுக்கு குடைச்சல் குடுத்துட்டு இருக்காரு வே...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி. “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, 'மச்சான்'னு அழைக்கிற அளவுக்கு நெருக்கமான உறவினர் ஒருத்தர் இருக்காரு... த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்த், புதுச்சேரி புஸ்ஸி தொகுதி எம்.எல்.ஏ.,வா இருந்தப்ப, அவரது நண்பரா இருந்திருக்காரு வே... “இப்ப ஆனந்த், தமிழக நீர்வளத் துறையின் அமைச்சராயிட்டதால, ரங்கசாமியின் உறவினர் அடிக்கடி சென்னைக்கு வந்துடுதாரு... 'ஆனந்த் எனக்கு ரொம்பவும் நெருங்கியவர்'னு சொல்லி, பல அமைச்சர்களை பார்த்து காரியங்களை சாதிக்காரு... “இவரை பத்தி சில அமைச்சர்கள், ஆனந்திடமே விசாரிக்க, அவருக்கு தர்மசங்கடமா இருக்காம் வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “சுந்தரம், தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாயே, ''டெண்டர் கோப்புகளை தணிக்கை செய்யணும்னு சொல்றாங்க பா...'' என்றபடியே தொடர்ந்தார்... “நகர் ஊரமைப்பு சட்டப்படி, சி.எம்.டி.ஏ., சார்பில் சென்னைக்கு, 'மாஸ்டர் பிளான்' தயாரிச்சு, நகர்ப்புற வளர்ச்சியை முறைப்படுத்தணும்... “ஆனா, கடந்த தி.மு.க., ஆட்சியில் இதை செய்யாம சமுதாய கூடம், பள்ளி கட்டடம், திருமண மண்டபம் கட்டுறதுன்னு, மாநகராட்சி செய்ய வேண்டிய திட்டங்களை எல்லாம் இவங்க, 'டெண்டர்' விட்டு செஞ்சிருக்காங்க பா... “கடந்த மூணு வருஷத்துல மட்டும், 3,900 கோடி ரூபாய்க்கு திட்டப் பணிகளை செஞ்சிருக்காங்க... 'இந்த டெண்டர்கள்ல நிறைய முறைகேடுகள் நடந்திருக்கு'ன்னு அப்பவே புகார்கள் வந்துச்சு பா... “இதனால, 'இந்த டெண்டர் விவகாரங்களை ஆராயணும்... குறிப்பா, வடசென்னை வளர்ச்சி திட்டம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் தணிக்கை செய்யணும்'னு சி.எம்.டி.ஏ.,வில் இருக்கிற நேர்மையான அதிகாரிகள் சொல்றாங்க பா...” என்றார் அன்வர்பாய். “தனியார் பள்ளியின் நுாதன வழிப்பறியை கேளுங்க...” என்றார் அந்தோணிசாமி. “எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “சென்னை, வியாசர்பாடி பகுதியில் தனியார் உயர்நிலை பள்ளி ஒண்ணு இருக்கு... இந்த பள்ளி கேன்டீன்ல, பிளாஸ்டிக் பாட்டில்கள்ல ரஸ்னா உள்ளிட்ட குளிர்பானங்களை விற்கிறாங்க... “இந்த குளிர்பானங்களை வாங்கி குடிச்சா, மாணவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்னு பள்ளி நிர்வாகம் உத்தரவு போட்டிருக்குது.. . இதை கண்காணிக்க ஆசிரியர் கள், மாணவர்கள் அடங்கிய குழுவையும் நியமிச்சிருக்காங்க... “சில மாணவர்கள் கேன்டீன்ல ரஸ்னா வாங்கி குடிச்சிட்டு, பிளாஸ்டிக் பாட்டில் களை அ ங்கங்கே வீசிடுறாங்க... இவங்க, பள்ளியின் கண்காணிப்பு குழுவிடம் சிக்கி, 100 ரூபாய் அபராதமும் கட்டுறாங்க.. . “அபராதம்னு சொன்னா பெற்றோர் திட்டுவாங்கன்னு, வேற ஏ தாவது காரணத்தை சொல்லி பணம் வாங்கி கட்டுறாங்க... வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சு... அபராதம்னு வசூல் வரும்படியும் ஆச்சு பாருங்க. ..” என முடித்தார் அந்தோணிசாமி. தெருவில் சென்ற சிறுவனை நிறுத்திய குப்பண்ணா, “அம்பி, எந்த ஸ்கூல்லடா படிக்கற... ” என விசாரிக்க, அவனும், 'செயின்ட் ஜோசப் ஸ்கூல் அங்கிள்' என்ற ப டியே நடந்தான்; பெரிய வர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !