உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஏடிஸ் கொசு உற்பத்தி ரூ.1.20 லட்சம் அபராதம்

ஏடிஸ் கொசு உற்பத்தி ரூ.1.20 லட்சம் அபராதம்

அடையாறு: 'டெங்கு' காய்ச்சல் பரப்பும், 'ஏடிஸ்' கொசு உற்பத்திக்கு காரணமான கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடையாறு மண்டலத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில், 168வது வார்டில் உள்ள ஒரு கட்டுமான பணி தளத்தில், 'டெங்கு' பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தி அதிகமாக இருந்தது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள், கட்டுமான நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதேபோல, 172வது வார்டு, ஐ.ஐ.டி., வளாகம் மற்றும் 177வது வார்டில் தலா ஒரு கட்டடத்தில் கொசு உற்பத்தி அதிகமாக இருந்தது. அந்த கட்டடங்களுக்கு, தலா 10,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டன. இதர வார்டுகளில், ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தால், அபராதம் விதிக்க வலியுறுத்தி உள்ளதாக, மண்டல சுகாதார அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை