மேலும் செய்திகள்
காற்று வேகம் நாளை குறையும்
06-Mar-2025
புதுடில்லி:காற்று மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கும் தலைநகர் டில்லியில் நேற்று மாசற்ற மிகவும் சுத்தமான காற்று வீசியது. இது, கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரை இல்லாத நிலை என காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.டில்லியில் நேற்று மாலை 4:00 மணிக்கு, காற்றின் தரக்குறியீடு 85 ஆக பதிவாகி இருந்தது. இது, மிகவும் திருப்திகரமான நிலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரை இதுபோன்ற திருப்தியான நிலையில் காற்றின் தரக்குறியீடு பதிவானது இல்லை. இது, இந்த ஆண்டின் முதல் மாசற்ற நாள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2020ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் முதன் முறையாக மார்ச் மாதத்தில் டில்லி காற்றின் தரத்தில் திருப்தியான நிலையைக் கண்டுள்ளது.வெப்பநிலை நேற்று, அதிகபட்சமாக 33 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 4.1 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை 18.7 டிகிரி செல்ஷியஸ், காற்றில் ஈரப்பதம் 62 முதல் 50 சதவீதம் வரை நிலவியது.ஹோலி பண்டிகையான நேற்று முன் தினம், டில்லி மாநகரில் வெப்பநிலை 36.2 டிகிரி செல்ஷியஸை எட்டி தகித்தது. இது, இயல்பை விட 7.3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் வானிலை நிபுணர்கள் கூறினர்.டில்லியில் இன்று, லேசான மழை அல்லது தூறலுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 32, குறைந்தபட்சமாக 17 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
06-Mar-2025