மேலும் செய்திகள்
பொம்மராஜிபேட்டையில் அர்ச்சுனன் தபசு
19-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மே- 18ல் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. கடந்த-1ம் தேதி மஹாபாரத சொற்பொழிவு கொடியேற்றம், சிவாச்சாரியர்கள் முன்னிலையில், வெகுவிமரிசையாக நடந்தது.கடந்த 7ம் தேதி வில் வளைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு பஞ்ச பாண்டவர்கள், சூது ஆடியதில், துாரியோதனிடம் நாடு, நகரத்தை இழந்தனர். நேற்று முன்தினம் இரவு வன வாசம் புறப்பட்ட பஞ்ச பாண்டவர்கள், நேற்று கடுமையான விரதம் மேற்கொண்டனர்.சிவபெருமானை நோக்கி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில், பரிசேதனை செய்த பின், சிவன் பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனனுக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், விரதம் இருந்த பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி வணங்கி சென்றுனர்.
19-Apr-2025