கன்டோன்மென்ட் குப்பை கிடங்கில் தீ
பல்லாவரம்,பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதிக்குட்பட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை, கன்டோன்மென்டிற்கு சொந்தமான இடத்தில் கொட்டி தரம் பிரிக்கப்படுகிறது.இந்த நிலையில், நேற்று மாலை, குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இந்த தீயால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.