உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பழனிசாமி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

பழனிசாமி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சென்னை, அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவை துணை செயலரும், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலர் பெரும்பாக்கம் ராஜசேகர் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.சென்னை, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பழனிசாமி பிறந்த நாளில் பிறந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, மருத்துவ அணி செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான வேணுகோபால், தங்க மோதிரங்களை அணிவித்தார்.பெரும்பாக்கம் ராஜசேகர் சார்பில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சென்னை புறநகர் மாவட்ட செயலர் கந்தன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலர் மணிமாறன், இலக்கிய அணி துணைச் செயலர் சக்திவேல், தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ