உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / நடுவர் மன்ற தீர்ப்பு மீறல் அரசு இல்லம் பறிமுதல்?

நடுவர் மன்ற தீர்ப்பு மீறல் அரசு இல்லம் பறிமுதல்?

புதுடில்லி, நவ. 22-நடுவர் மன்ற தீர்ப்பை ராஜஸ்தான் அரசு மீறியதை அடுத்து, டில்லியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த 'பிகானேர் ஹவுஸ்' என்னும் இல்லத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் இந்தியா கேட் அருகே, ராஜஸ்தான் அரசால் பராமரிக்கப்படும் 'பிகானேர் ஹவுஸ்' எனப்படும் பாரம்பரிய சின்னம் அமைந்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள பிகானேர் நகரத்தை ஆண்ட மஹாராஜாவிற்காக கட்டப்பட்ட இந்த மண்டபம், தற்போது அம்மாநில கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக உள்ளது.

பல முறை அவகாசம்

சுதந்திர வரலாற்றின் முக்கிய அம்சமான இந்த இல்லத்தை பொதுமக்கள் அனைவரும் வாரத்தின் ஏழு நாட்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில், அந்த பணியில் ஈடுபட்ட, 'என்விரா இன்ப்ரா இன்ஜினியர்ஸ்' நிறுவனத்துக்கு 50.31 லட்சம் ரூபாயை வழங்க, அதை நிர்வகித்து வரும் நோக்கா நகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், இதை மாநகராட்சி செலுத்த தவறியது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு, டில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:புதுப்பிப்பதற்காக பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்த பிகானேர் ஹவுசுக்கு, பல முறை அவகாசம் வழங்கப்பட்டது. இதுகுறித்து சொத்து பத்திரம் தொடர்பான பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க, பிகானேர் ஹவுசை நிர்ணயிக்கும் நோக்கா நகராட்சி தவறிவிட்டது. எனவே, அந்த கட்டடத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்படுகிறது.

உரிய நடவடிக்கை

இந்த சொத்தை விற்கவும், பரிசாகவோ அல்லது வேறு வழிகளில் மாற்றவோ, கட்டணம் வசூலிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ