உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, நவராத்திரி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சித்தர் பீடம் வந்த லட்சுமி பங்காரு அடிகளாரை, சென்னை மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு, லட்சுமி பங்காரு அடிகளார் தீபாரதனை காட்டி, கருவறையில் நவராத்திரி அகண்ட தீபத்தை ஏற்றிவைத்து, நவராத்திரி விழாவை துவக்கி வைத்தார். அதன்பின், அகண்ட தீபத்தை மூன்று பெண்கள் கையில் ஏந்தியடி, சித்தர் பீடத்தை வலம் வந்தனர்.நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள் மற்றும் பக்தர்கள், அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்து, அம்மனை வழிபட்டனர்.நவராத்திரி விழா, நேற்று துவங்கி வரும் 12ம் தேதி வரை, 11 நாட்கள் நடைபெறும். அந்நாட்களில், ஆதிபராசக்தி அம்மனுக்கு, தினமும் சிறப்பு அலங்காரம், காப்புகள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெறும். புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, உலக நன்மைக்காக, வேள்வி பூஜையை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் சென்னை சக்திபீடங்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை