உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குப்பைக்கு போகும் பலா பழங்கள்

குப்பைக்கு போகும் பலா பழங்கள்

கோயம்பேடு :விற்பனையின்றி தேங்கி அழுகிய பலாப்பழங்கள், குப்பையில் கொட்டப்படுகின்றன.பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், பண்ருட்டி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும், கோயம்பேடு சந்தைக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.இவை, எடைக்கேற்ப, 100 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை குறைந்தாலும் வரத்து அதிகரிப்பால் விற்பனையின்றி பலாப்பழங்கள் தேங்குகின்றன. சில நாட்களில் அழுகிவிடுவதால் வேறு வழியின்றி வியாபாரிகள் குப்பையில் கொட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !