பில்டர் காபியை பருகியபடியே, ''அதிகாரிகள் திணறிண்டு இருக்கா ஓய்...'' என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''ஈரோட்டுல, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம்பார்க், மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகள்ல, மாநகராட்சிஅனுமதியில்லாம நிறையகடைகள் திறந்திருக்கா... அதுலயும், பஸ் ஸ்டாண்டுல நடைபாதையை ஆக்கிரமிச்சு, ஜூஸ், செருப்பு, தின்பண்டம்னு ஏகப்பட்ட கடைகளை பலர் வச்சிருக்கா ஓய்...''சமீபத்துல, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற,மாநகராட்சி அதிகாரிகள் போயிருக்கா... ஆனா, 'மேயர், துணை மேயர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் அனுமதியோடு தான் கடைகளை வச்சிருக்கோம்... ''இதுக்கு தினசரி வாடகையா குறிப்பிட்ட தொகையையும், ஆளுங்கட்சியினருக்கு கொடுக்குறோம்'னு வியாபாரிகள் சொல்லியிருக்கா ஓய்...''இதை கேட்ட அதிகாரிகள், 'அபவுட்டர்ன்' அடிச்சு திரும்பிட்டா... இதுல, ஆளுங்கட்சியினர்மட்டுமில்லாம, மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் சிலரும்சம்பந்தப்பட்டிருக்காளாம்... இதனால, 'ஆக்கிரமிப்புகளை எந்த காலத்துலயும் அகற்றவே முடியாது'ன்னு மக்கள் புலம்பறா ஓய்...''என்றார், குப்பண்ணா.''சம்பளம் கிடையாதுன்னு மிரட்டுறாரு பா...''என, அடுத்த தகவலுக்குதடம் மாறினார் அன்வர்பாய்.''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ராமநாதபுரம் மாவட்ட புள்ளியியல் துறையில், ஒரு அதிகாரி இருக்காரு... இவரிடம் போய், 'குழந்தைக்கு உடம்பு சரியில்லை... லீவு வேணும்'னு கேட்டா, 'சும்மா பொய் சொல்லாதீங்க... உங்க குடும்பத்துல, குழந்தையை பார்த்துக்க வேற யாருமே இல்லையா'ன்னு எகத்தாளமா பேசுறாரு பா...''பணியாளர்கள் ஏதாவது அவசரத்துக்கு மொபைல் போனில் கூப்பிட்டாலும், அதை எடுக்கிறதே இல்லை... 'யாருக்கும் இந்த மாசம் சம்பளம் போட மாட்டேன்... நீங்க செய்ற வேலைக்கு சம்பளம் வெட்டிச் செலவு'ன்னு சொல்றாரு பா...''சில பெண் ஊழியர்களை, வேற மாவட்டத்துக்கு போய் வேலை பார்க்கும்படி அலைக்கழிக்கிறாரு... இதனால, இவரை கண்டிச்சு போனமாசம் ஊழியர்கள் எல்லாரும் ஆர்ப்பாட்டமேநடத்தினாங்க பா...''அதன்பிறகும், அவர் நடவடிக்கையில்எந்த மாற்றமும் இல்லை...மூணு வருஷம் தாண்டியும்,ராமநாதபுரத்துலயே, 'டேரா' போட்டிருக்கும்அவரை மாற்றக் கோரி, பெரிய அளவுல போராட்டம் நடத்தவும் ஊழியர்கள் தயாராகிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''சமையல்காரரையும்அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போயிட்டாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், கட்சியின்பொதுக்குழுவை முடிச்ச கையோட, அமெரிக்காவுக்கு பறந்துட்டாரு... வழக்கமா அமெரிக்கா போனா, ஒரு மாசம் தான் தங்குவாரு வே...''ஆனா, இந்த முறை மூணு மாசம் அங்க தங்குதாரு... அதுவரைக்கும் அந்த ஊர் சாப்பாடு சரிப்படாதுன்னு, தன் வீட்டுல இருந்த, ஒடிசாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் பாபுஜியை, கூடவே கூட்டிட்டு போயிட்டாரு வே...''அமெரிக்காவுல, கதர்காஸ்டியூம் தொழில்ல கமல்இறங்கியிருக்காரு... மூணுமாசம் தங்கியிருந்து, தொழிலை விஸ்தரிக்கபிளான் போட்டு தான் போயிருக்காரு... 'டிசம்பர் கடைசியில் சென்னை திரும்பி, கட்சி வேலைகள்ல ஈடுபடுவார்'னு அவரது கட்சி நிர்வாகிகள் சொல்லுதாவ வே...'' எனமுடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.