மாநில கோகோ போட்டிமாணவர்களுக்கு பாராட்டு
மாநில கோகோ போட்டிமாணவர்களுக்கு பாராட்டுசேலம், மாநில கோகோ போட்டியில் வெற்றி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை சார்பாக, 40வது மாநில அளவிலான, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ போட்டி, திருச்சியில் கடந்த டிச.,19, 20, 21ல் நடந்தது. இதில் சேலம் மாவட்டம், வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றது. இந்த அணியினருக்கான பாராட்டு விழா, நேற்று பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன் தலைமை வகித்தார். இதையொட்டி நடந்த ஊர்வலம் வலசையூர் பிரிவு ரோட்டில் துவங்கி வலசையூர், பள்ளிப்பட்டி வழியாக பள்ளியில் வந்து முடிவடைந்தது. மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வைத்தியலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன், அன்பன் டேனியல், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.