உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சோழவரம், நெற்குன்றம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானபிரசூனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கிராம மக்கள் சார்பில், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளபட்டன.நேற்று காலை 9:00 மணிக்கு, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது.அதை தொடர்ந்து, வித்யா கணபதி, சுப்ரமணிய சமேத வள்ளி - தெய்வானை, லட்சுமி நாராயணன் ஆகிய சன்னிதியின் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.கூடியிருந்த பக்தர்கள் 'ஓம் நமச்சிவாயா... ஓம் நமச்சிவாயா' என கோஷம் எழுப்பி, சிவபெருமானை நெஞ்சுருக வணங்கினர். தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடந்தன.மாலை திருக்கல்யாணம் மற்றும் வீதியுலா நடந்தது. விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை