உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சிறுத்தை நடமாட்டம்; கேமரா இடமாற்றம்

சிறுத்தை நடமாட்டம்; கேமரா இடமாற்றம்

சென்னிமலை, சென்னிமலையில் காப்புக் காட்டை ஒட்டிய பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அதை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன், 10 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தினர். இதில் சிறுத்தை நடமாட்டம் சிக்கவில்லை. இதனால், 10 கேமராக்களையும் நேற்று அகற்றி வேறு இடங்களில் பொருத்தினர். அதாவது குட்டக்காடு, கல்குவாரி பகுதி, அய்யம்பாளையம் மலை அடிவார பகுதி, வக்கீல் தோட்டம் பகுதிகளில் அமைத்தனர். 'கேமரா பொருத்தும் தகவல் சிறுத்தைக்கு தெரிந்து விடுவதால், அப்பகுதிகளுக்கு வராமல் தவிர்த்து விடுகிறதோ?' என்ற விபரீத சந்தேகமும், ஒரு சிலருக்கு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை