உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / யாரும் அசைக்க முடியாது!

யாரும் அசைக்க முடியாது!

'பரவாயில்லையே... பிரதமர் மோடியிடமே பாராட்டு பெற்று விட்டாரே...' என, ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால்சர்மாவைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், கட்சியின் சக தலைவர்கள்.கடந்த 2023ல் நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும், அந்த கட்சியின் மூத்த தலைவரான வசுந்தரா ராஜேசிந்தியா தான், முதல்வராகதேர்வு செய்யப்படுவார்என, அனைவரும் நினைத்தனர்.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அதிகம் அறிமுகமில்லாதபஜன்லால் சர்மா முதல்வராக நியமிக்கப்பட்டார். இத்தனைக்கும் இந்த தேர்தலில் தான், அவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.இதனால், 'புதுமுகமான பஜன்லால் சர்மாஎப்படி ஆட்சி நடத்தப் போகிறார் என தெரியவில்லை. அனுபவம் இல்லாதவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கக் கூடாது...' என, கட்சிக்குள் முணுமுணுப்பு எழுந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்,எந்தவித பிரச்னையும் இல்லாமல், ஓராண்டு ஆட்சியை சமீபத்தில் நிறைவு செய்து விட்டார், பஜன்லால் சர்மா. சமீபத்தில், ராஜஸ்தானில் ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஐந்து தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதைக் கேள்விப்பட்டதும், பஜன்லால் சர்மாவை போனில் அழைத்து, பாராட்டு மழை பொழிந்து விட்டார், பிரதமர் மோடி.இதனால் உற்சாகமடைந்துள்ள பஜன்லால் சர்மா, 'இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியில் இருந்து யாரும் நம்மை அசைக்க முடியாது...' என, கூறி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி