உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குப்பை கொட்ட நிலம் ஒதுக்கீடு நொச்சிலி கிராமவாசிகள் எதிர்ப்பு

குப்பை கொட்ட நிலம் ஒதுக்கீடு நொச்சிலி கிராமவாசிகள் எதிர்ப்பு

திருவள்ளூர்:பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்காக குப்பை கொட்ட நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய கோரி, நொச்சிலி கிராமவாசிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.பள்ளிப்பட்டு தாலுகா நொச்சிலி மற்றும் சுற்றியுள்ள 10 கிராமத்தினர், திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:பள்ளிப்பட்டு வட்டம், நொச்சிலி, எகுவாமிட்டூர், விஜயமாம்பாபுரம், பொதட்டூர்பேட்டை கிராமத்தினருக்காக, பட்டா நிலத்தில் அரசு, சாலை அமைத்துள்ளது. இந்த நிலையில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின் குப்பை கொட்டவும், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கவும், 10 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள நொச்சிலி கிராமத்தில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பொதட்டூர்பேட்டையிலேயே குப்பை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நிலம் இருந்தும், அப்பகுதியினர் எதிர்ப்பால், 10 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள நொச்சிலியை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், எகுவாமிட்டூர், தர்மராஜ கோவில், கீமிட்டூர், வட்டியூர், வெங்கடாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்தோருக்கு, சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது.எனவே, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்காக நொச்சிலி கிராமத்தில் குப்பை கொட்டவும், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை