“அரசு அலுவலகத்துலயே லாட்டரி விற்பனை சக்கை போடுபோடறது ஓய்...” என்றபடியே வந்தார், குப்பண்ணா.“எங்க வே இந்த அநியாயம்...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“கோவை பழைய கலெக்டர் அலுவலகத்துல, கேரள மாநில பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை ஜோரா நடக்கறது... இதை விக்கறது, வெளியாள் யாரும் இல்ல ஓய்...“கோவை வடக்கு தாலுகா அலுவலகத்துல உதவியாளரா இருக்கற,முருகன் பெயர் கொண்டவர் தான், 'சைடு பிசினசா' இதை பண்ணிண்டு இருக்கார்... தடாகம் பகுதி வி.ஏ.ஓ., அலுவலகத்துல உதவியாளரா இருக்கற ஒருத்தர்,கேரள எல்லையான ஆனைக்கட்டியில இருந்து,ரெண்டு நாளுக்கு ஒருமுறை லாட்டரி சீட்டுகளைவாங்கிண்டு வந்து, தரார்...இதுக்காக, அவருக்கும் ஒரு பங்கை தாலுகா உதவியாளர் குடுத்துடறார்ஓய்...” என்றார், குப்பண்ணா.“அரசுக்கு பல கோடிரூபாய் வருவாய் இழப்பைஏற்படுத்துறாங்க...” என்றஅந்தோணிசாமியே தொடர்ந்தார்...“சிவகங்கை மாவட்டம்,திருப்புவனம் தொகுதி வேம்பங்குடியில், 15ஏக்கர் புஞ்சை நிலத்துல,10 ஏக்கர்ல மட்டும் கிராவல் மண் குவாரி நடத்த, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் அனுமதிதந்திருக்காருங்க...“இதன்படி, ஒரு லோடுக்கு 3 யூனிட் கிராவல் மண் எடுக்கலாம்...ஆனா, பெரிய டாரஸ் லாரிகள்ல, 6 யூனிட் மண்ணை சட்டத்துக்கு புறம்பா கடத்திட்டு போறாங்க...“அதுவும் இல்லாம, அரசு அனுமதி பெறாத சர்வே எண்களிலும், கிராவல் மண்ணை திருடுறதால, அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுதுங்க... அனுமதித்த ஆழத்தை விட, 15 அடி ஆழத்துக்கும் மேலா தோண்டி மண்ணை அள்ளுறாங்க...“இதனால, 'சட்டவிரோதமா மண் எடுக்கிறகிராவல் குவாரி உரிமத்தைரத்து செய்து, கனிமவள திருட்டில் ஈடுபடுறவங்கமீது நடவடிக்கை எடுக்கணும்'னு, சமூகநல ஆர்வலர்கள் பலரும், முதல்வர் ஸ்டாலினுக்கும்,சென்னையில இருக்கிறபுவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனருக்கும் புகார் அனுப்பியிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.“லட்சங்கள்ல கொழிக்காருல்லா...” என,கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அண்ணாச்சி.“எந்த அதிகாரியை சொல்றீங்க பா...” என, பட்டென கேட்டார் அன்வர்பாய்.“திருச்சி மாவட்ட நிலஅளவை துறையில், உயர் அதிகாரியா இருக்கிறவரை தான் சொல்லுதேன்... இவருக்கு கீழே,நாலு கோட்ட ஆய்வாளர்களும், 75க்கும் மேற்பட்டசர்வேயர்களும் இருக்காவ வே...“இதுல, கிராம சர்வேயர்கள் மாசா மாசம்,6,000 ரூபாயும், நகர சர்வேயர்கள், 11,000 ரூபாயும், அதிகாரிக்கு, 'படி' அளக்கணும்... இந்தவகையில, மாசத்துக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேலஅதிகாரி வசூல் வேட்டைநடத்துதாரு வே...“பணம் தராத சர்வேயர்களுக்கு, 'பணி சரியில்லை'ன்னு சொல்லி,அவங்க சம்பளத்தை நிறுத்திடுவாராம்... இதுபோக, சர்வேயர்கள் பணியிட மாறுதலுக்கு, இடத்துக்கு தகுந்த மாதிரி, 30,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்காரு... இவரது வசூல் வேட்டைக்கு, முசிறி கோட்ட அதிகாரிஒருத்தரும் உறுதுணையாஇருக்காரு வே...” என முடித்தார், அண்ணாச்சி.பெஞ்சில் புதிதாக சிலஇளைஞர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.