உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / நகராட்சி துணை தலைவர் பதவிக்கு பஞ்சாயத்து!

நகராட்சி துணை தலைவர் பதவிக்கு பஞ்சாயத்து!

''உளவுப்பிரிவு போலீசார் கோட்டை விட்டுட்டா ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''எந்த விவகாரத்துல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''திருப்பூர், பாண்டியன்நகர்ல வீட்டுக்குள்ளேயேநாட்டு வெடி தயாரிச்சப்ப,விபத்து நடந்து நாலு பேர் இறந்து போயிட்டால்லியோ... சுத்தியிருக்கற 16 பேர் காயம்பட்டு, 'ட்ரீட்மென்ட்' எடுத்துண்டு இருக்கா ஓய்...''வெடி விபத்து நடந்தஅப்பறமா, போலீஸ் அதிகாரிகள் அரக்க பறக்கஓடி வந்தா... அந்த ஏரியாவுல, ரெண்டு வாரத்துக்குமேலா நாட்டு வெடிகளைதயாரிச்சிருக்கா ஓய்...''சிட்டிக்குன்னே தனி உளவுப்பிரிவு போலீசார் இருக்கா... 'இவாளுக்கு இது பத்தி தெரியாதா... அல்லது தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்துட்டாளா?'ன்னு கேள்விகள் எழுந்திருக்கு ஓய்...''இதே விபத்து, ராத்திரிநேரம் மட்டும் நடந்திருந்தா,இன்னும் நிறைய உயிர்கள் பலியாகியிருக்கும்... இந்த விவகாரத்துல, உளவுப்பிரிவு போலீசார் மேல தான் எல்லாரும் குற்றம் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''புல்லட்லயே நகர் வலம் வர்றாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''மதுரை மாநகராட்சி வார்டுகள்ல, குப்பையைஅகற்றுவதில் கமிஷனர் தினேஷ்குமார் தீவிர அக்கறை காட்டுறாரு... சென்னையில இருக்கிற மாதிரி, மதுரையிலும் ராத்திரியில குப்பை அள்ளும் நடைமுறையைகொண்டு வந்துட்டாரு பா...''எந்த வார்டுலயாவது,தொட்டிகள்ல குப்பை நிரம்பி ரோடுகள்ல கொட்டிக்கிடந்தா, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுத்துடுறாரு... அதுவும் இல்லாம, குப்பை அள்ளும் பணியை கண்காணிக்க, அதிகாலை மற்றும் ராத்திரி நேரங்கள்ல தன் புல்லட்டைஎடுத்துட்டு, 'ரவுண்ட்ஸ்' கிளம்பிடுறாரு... ''புல்லட் சத்தம் கேட்டாலே, துாய்மை பணியாளர்கள் உஷார் ஆகிடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''துணை தலைவர் பதவிக்கு பஞ்சாயத்து நடக்குதுங்க...'' என்றார்,அந்தோணிசாமி.''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் மொத்தம், 18 வார்டுகள் இருக்கு... 2022ல் இங்க நடந்த தேர்தல்ல, தி.மு.க., சார்புல மூணு பேர் தான் ஜெயிச்சாங்க...''மற்ற, 15 பேரும் சுயேச்சையா தான் ஜெயிச்சாங்க... ஒருங்கிணைந்த காயல்பட்டினம்முஸ்லிம் ஐக்கிய பேரவை என்ற அமைப்பு சார்பில்,முத்துமுகமது என்பவரைதலைவரா தேர்வு செஞ்சாங்க... ''துணை தலைவர் பதவிக்கு போட்டி அதிகமா இருக்கவே, 'முதல் ரெண்டரை வருஷம் சுல்தான் லெப்பை என்பவரும், அடுத்த ரெண்டரை வருஷம் அபுபக்கர் அஜ்வது என்பவரும் இருக்கலாம்'னு எழுத்துப்பூர்வமா உடன்படிக்கை போட்டாங்க...''இப்ப, ரெண்டரை வருஷம் முடிஞ்சு போச்சு...ஆனா, சுல்தான் லெப்பைபதவி விலக மறுக்கிறாருங்க... 'பஞ்சாயத்து' உள்ளூர் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனிடம் போச்சுங்க...''அவரோ, தன் கட்சியைசேர்ந்த, 'ரங்கநாதனுக்கு துணைத் தலைவர் பதவியை தாங்க'ன்னு கேட்டிருக்காரு... இதனாலபாதிக்கப்பட்ட அபுபக்கர்அஜ்வது, தி.மு.க., தலைமையிடம் புகார் அளிக்க இருக்காருங்க...''இந்த அபுபக்கர், பாரம்பரிய தி.மு.க., குடும்பத்தை சேர்ந்தவர்தான்... கட்சியில வாய்ப்புதராததால, சுயேச்சையா போட்டியிட்டாரு... இவரது மாமனார், ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., இளைஞரணி செயலரா இருந்திருக்காருங்க... இதனால, தனக்கு நியாயம் கிடைக்கும்னு அபுபக்கர் நம்புறாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் மவுனமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ