வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏன் கோவில்பட்டி தனியார் மருத்துவமனை டாக்டரை வைத்து தூத்துக்குடியில் மருத்துவ பரிசோதனை. தூத்துக்குடியில் பெரிய டாக்டர்கள் கிடையாதா..?
மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025
பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''தி.மு.க., வினரை கடுப்பேத்திட்டாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேசிய மாநாடு மூணு நாளா நடந்துச்சுல்லா... இதுல ஒரு நாள் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கிட்டு பேசினாரு வே...''அந்த மாநாட்டுல, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி யின் எம்.பி., ஒருத்தர், 'வீரத்தாய் லீலாவதி வாழ்ந்த புண்ணிய பூமி இந்த மதுரை'ன்னு பேசியிருக்காரு... அதே மாதிரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத்தும், 'லீலாவதியை சில கிரிமினல்கள் தான் கொலை செய்தாங்க'ன்னு பேசியிருக்காரு வே...''மதுரை மாநகராட்சி யில், மார்க்சிஸ்ட் கவுன்சிலரா இருந்த லீலாவதியை, 1997ம் வருஷம், தி.மு.க.,வினர் சிலர் தான் கொலை செஞ்சாவ... அதை இப்ப சுட்டிக்காட்டி, காம்ரேட்கள் பேசியதைக் கேட்டு, மதுரை, தி.மு.க.,வினர் கொதிச்சு போயிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''ஸ்லீப்பர் செல்களை ஓரங்கட்ட போறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சம்பந்தமா, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பார்த்து பேசினாருல்ல... அப்ப, 'கடந்த லோக்சபா தேர்தல்ல நம்ம கூட்டணி முறிவுக்கு காரணமா இருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை மாத்தணும்'னு அமித் ஷாவிடம் வலியுறுத்தியிருக்காரு பா...''இந்த சந்திப்பு முடிஞ்சதுமே, 'தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகுகிறார்'னு தகவல்கள் பரவுச்சு... இதை பரப்பியதே தி.மு.க.,வினர் தானாம் பா...''பா.ஜ.,வுல, தி.மு.க.,வின், 'ஸ்லீப்பர் செல்'களா சிலர் இருக்காங்க... இவங்க தான், அமித் ஷா - பழனிசாமி சந்திப்பில் பேசப்பட்ட ரகசியங்களை தி.மு.க.,வுக்கு, 'லீக்' பண்ணியிருக்காங்க பா...''இதனால, தி.மு.க.,வின் ஸ்லீப்பர் செல்லா செயல்படும் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் யார், யார்னு பா.ஜ., மேலிடம் விசாரிச்சிட்டு இருக்கு... அவங்களை கட்சி பதவிகள்ல இருந்து ஓரங்கட்டவும், சட்டசபை தேர்தல்ல சீட் தராம ஒதுக்கி வைக்கவும் திட்டமிட்டிருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.''சர்ச்சைக்குரிய டாக்டரை வச்சு முகாம் நடத்தியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''துாத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில், சமீபத்துல போலீசாருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடந்துது... கோவில்பட்டியை சேர்ந்த தனியார் மருத்துவமனை உரிமை யாளரான டாக்டர் தலைமையில், மருத்துவக் குழுவினர் உடல் பரிசோதனையை நடத்தினா ஓய்...''எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், ஏ.எஸ்.பி., மதன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் பலரும் முகாம்ல கலந்துண்டா... இந்த தனியார் மருத்துவமனை, 'நர்சிங் டிப்ளமா' பயிற்சி பள்ளியையும் நடத்திட்டு இருக்கு ஓய்...''இங்க, சில மாசத்துக்கு முன்னாடி தலித் மாணவியை, சக மாணவி யின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வச்சா... இது சம்பந்தமா, வன்கொடுமை தடுப்பு சட்டத்துல வழக்கும் பதிவாகி, தேசிய எஸ்.சி., கமிஷன் இயக்குநர் நேர்ல வந்து விசாரணையும் நடத்தினார் ஓய்...''அந்த வழக்கு இன்னும் முடியாத நிலையில், அப்பள்ளியின் உரிமையாளரான டாக்டர் மூலம் போலீசாருக்கு பரிசோதனை செஞ்சது, சர்ச்சையை கிளப்பிடுத்து... 'இந்த வழக்குல இனி போலீசார் செயல்பாடு எப்படி இருக்கும்'னும் கேள்வி எழுந்திருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.''சிவகுமார் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்ற படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
ஏன் கோவில்பட்டி தனியார் மருத்துவமனை டாக்டரை வைத்து தூத்துக்குடியில் மருத்துவ பரிசோதனை. தூத்துக்குடியில் பெரிய டாக்டர்கள் கிடையாதா..?
11-Mar-2025