உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு

பழவந்தாங்கல், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், இரவுப் பணி முடித்து, வீட்டிற்கு திரும்பிய பெண் போலீசிடம் செயின் பறித்து, அநாகரிகமாக செயல்பட்ட சம்பவம், கடந்த 16ம் தேதி நள்ளிரவு நடந்தது.அந்த குடிபோதை ஆசாமியை பயணியர் தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டப்பகலில், ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார். ரயிலில் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்களும் பிடிபட்டனர்.பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், பயணியரை அச்சுறுத்தும் வகையில் இருந்தன.இதையடுத்து, ரயில்வே பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.மின்சார ரயில்கள் வரும்போது, விசில் அடித்து எச்சரிக்கை செய்து, தொங்கி வரும் பயணிரையும் எச்சரித்து உள்ளே அனுப்புகின்றனர்.மேலும், ரயில்களில் பயணம் செய்யாமல் நிலையங்களில் சுற்றி வருவோரை பிடித்து விசாரிக்கின்றனர்.கத்தியுடன் தப்பியோடியமாணவர் சிக்கினார்பழவந்தாங்கல்,பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம், இரு கல்லுாரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றி வந்தனர். தகவலின்படி வந்த பழவந்தாங்கல் போலீசார், அவர்களை பிடிக்க முயன்றபோது, அதில் ஒருவர் தப்பினார். பிடிபட்டவரிடம் விசாரித்ததில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த பார்த்திபன், 19, என்பதும், கத்தியுடன் தப்பியோடியவர் விஸ்வா, 19, என்பதும் தெரிந்தது.பச்சையப்பன் கல்லுாரியில் படித்து வரும் இருவருக்கும், நந்தனம் கல்லுாரி மாணவர்களுடன் பிரச்னை இருந்ததால், பாதுகாப்புக்காகவே கத்தி கொண்டு வந்ததாக, அவர்கள் தெரிவித்தனர். இருவரிடமும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி