உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பள்ளி வாகனங்கள் சோதனை 36 பஸ்களுக்கு அனுமதி ரத்து

பள்ளி வாகனங்கள் சோதனை 36 பஸ்களுக்கு அனுமதி ரத்து

சென்னை, மீனம்பாக்கம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு சோதனை, கூட்டு குழு ஆய்வு வாயிலாக நடத்தப்பட்டது.இக்குழுவில், மீனம்பாக்கம் ஆர்.டி.ஓ., அருணாசலம், தாம்பரம் கோட்டாட்சியர் முரளி, செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முகுந்தன் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ஆகியோர் இடம்பெற்றனர்.தாம்பரம், படப்பை அடுத்த கரசாங்காலில் நடந்த இந்த ஆய்வில், மீனம்பாக்கம் பகுதியில் உள்ள, 82 பள்ளி பேருந்துகள், தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள, 403 பள்ளி பேருந்துகள் ஆகியவற்றை சோதனை செய்தனர்.இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, முதலுதவி பெட்டி மற்றும் வாகனத்தில் தீயணைப்பான் கருவிகள் வைக்கப்படாமல் இருந்த, 36 பேருந்துகளுக்கு அனுமதி ரத்து செய்து, நிறுத்தி வைக்கப்பட்டது.மேலும், பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா என, சோதனை செய்யப்பட்டது.அதேபோல், வாகன தகுதி சான்றிதழ், ஒட்டுநரின் தகுதி சான்றிதழ் போன்றவையும் சரிபார்க்கப்பட்டன.இந்த ஆய்வின் போது, வாகன விதிமுறைகள் குறித்தும், தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அவசர காலங்களில் ஓட்டுனர்கள் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வாகன ஒட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை