உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் தொடர்வதும், அதை தி.மு.க., அரசு அதிகாரத்தை கொண்டு மூடி மறைக்க முயல்வதும் கண்டனத்திற்குரியது. சாத்தான்குளம் ஜெயராஜ்- மற்றும் பென்னிக்ஸ் மரணத்தின்போது, சட்டத்திற்கு உட்பட்டு அ.தி.மு.க., ஆட்சி செயல்பட்ட போதும், மனித உரிமை என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தது போல் வானத்திற்கும், பூமிக்குமாக முழங்கிய ஸ்டாலின்,இன்று அவரது ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?'எங்களுக்கு வந்தா ரத்தம்; உங்களுக்கு வந்தா தக்காளிசட்னியா?'ன்னு முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியா கேட்கிறாரோ பழனிசாமி? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு: சட்டசபை தேர்தல் வந்தால்,அ.தி.மு.க.,வுக்கு தான் மக்கள் ஓட்டளிப்பர். அ.தி.மு.க., என்ற கட்சியில் இருப்பதே பெருமை. செய்ய முடியாத பல திட்டங்களை, அ.தி.மு.க., அதிகளவில் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில், பழனிசாமி முதல்வராவது உறுதி.அடிக்கடி பா.ஜ.,வோடு சேர்த்து இவரை கிசுகிசுக்கிறதால, 'அ.தி.மு.க.,வில் இருப்பதே பெருமை'ன்னு முழங்குறாரோ?அ.தி.மு.க., அமைப்பு செயலர்செங்கோட்டையன் பேச்சு: ஐ.டி., பிரிவு இல்லை என்றால், அ.திமு.க., என்ற இயக்கமே இல்லை. ஈரோடு மாவட்டம், அ.தி.மு.க.,வின் கோட்டையாக திகழ்கிறது. வரும் 2026ல் அ.தி.மு.க., ஆட்சி தான் அமையும். கூட்டணி வலுவாக இருப்பதை, பொதுச்செயலர் பழனிசாமி பார்த்து கொள்வார்.கூவி கூவி அழைத்தாலும், கூட்டணிக்கு எந்த கட்சியும் வந்த மாதிரி தெரியலையே... தொண்டர்களை தெம்பாக்கவே இப்படி சொல்றாரோ?தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேச்சு: தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு இருக்க கூடாது என்பதை தான், நாம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறோம். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. எதிர்காலமே நீங்கள் தான் என்பதை, மாணவர்கள்புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தி திணிப்பு வந்தபோது, மாணவர் சமுதாயம் தான் முதலில் எதிர்த்து நின்றது. இன்று, 'நீட்' தேர்வை எதிர்ப்பதும் நீங்கள் தான்; ஹிந்தியைஎதிர்ப்பதும் நீங்கள் தான்.ஹிந்தி, நீட் என, பல விஷயங்களில் அரசியலுக்காக மாணவர்களை முன் நிறுத்தி எதிர்ப்பை உருவாக்குவதே நீங்க தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை