''எம்.எல்.ஏ.,வை சுத்தி டான்ஸ் ஆடியிருக்கா ஓய்...'' என்றபடியே, பில்டர் காபிக்கு ஆர்டர் தந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை மணலி அரசு மேல்நிலை பள்ளியில், சமீபத்துல இலவசசைக்கிள் வழங்கும் விழா, கலை திருவிழா,ஆசிரியர் தின விழான்னுமுப்பெரும் விழா கொண்டாடினா... இதுல, திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர் கலந்துண்டார் ஓய்...''மாணவ - மாணவியர்கலை நிகழ்ச்சி என்ற பெயர்ல, சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடினா... சில மாணவியர், எம்.எல்.ஏ., கைகளை பிடிச்சு மேடைக்கு அழைச்சுண்டு போய், அவரை நடுவில் உட்கார வச்சு, சுத்தி நின்னு டான்ஸ் ஆடியிருக்கா ஓய்...''அப்ப, சில மாணவியர் அவர் காலின் கீழ் அமர்ந்து, அவரை வணங்கியிருக்கா... இதை பார்த்து பெற்றோர், 'ஷாக்' ஆகிட்டா... 'இந்த மாதிரி கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்...ஸ்கூல் பங்ஷன்ல, சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடற கல்ச்சரை மொதல்ல ஒழிக்கணும்'னு குமுறிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தனிப்பிரிவை விட்டு வெளியில வர மாட்டேங்கிறாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.''போலீஸ் சமாச்சாரமா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ஆமா... துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவுல இருக்கிற நிறைய போலீசார், மூணு வருஷம் தாண்டியும் அங்கயே இருக்காங்க... அதுலயும் சிலர், ஆறு வருஷமா தனிப்பிரிவை விட்டு நகர மாட்டேங்கிறாங்க பா...''தனிப்பிரிவுல டூட்டி நேரம், சீருடை கிடையாது...இஷ்டத்துக்கு வரலாம், போகலாம்... எல்லாத்துக்கும் மேல மாமூல் கொட்டும்கிறதால, யாரும் இந்த இடத்தை விட்டு போக மாட்டேங்கிறாங்க பா...''சில இடங்கள்ல ஏதாவது புகார்ல சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆனாலும்,தங்களுக்கு வேண்டியஅதிகாரிகளை பிடிச்சு, மறுபடியும் தனிப்பிரிவுக்கு வந்துடுறாங்க... அதே மாதிரி, கன்ட்ரோல்ரூம் மற்றும் டி.எஸ்.பி., ஆபீஸ்கள்லயும், பல வருஷமா அசையாம இருக்கிற போலீசாரின் அதிகாரம் தான் கொடி கட்டி பறக்குது...''அதனால, 'கூண்டோடு எல்லாரையும் மாத்தினா தான், சட்டம்- ஒழுங்கை சரியா பேண முடியும்'னு புதுசா வந்திருக்கிற எஸ்.பி.,க்கு கீழ்மட்ட அதிகாரிகள் கோரிக்கை வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''என்கிட்டயும் இதே மாதிரி தகவல் ஒண்ணு இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''பெரம்பலுார் மாவட்ட வருவாய் துறையில, 10 வருஷமா ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார்கள் வச்சது தான் சட்டமா இருக்குதுங்க... ரொம்பவும் சின்ன மாவட்டமா இருக்கிறதால, இவங்க அசைக்க முடியாத சக்தியாஇருக்காங்க...''மாவட்டத்துக்கு புதுசா வர்ற கலெக்டர்,டி.ஆர்.ஓ., -ஆர்டி.ஓ.,ன்னு எல்லா உயரதிகாரிகளையும் இவங்க தான் வழி நடத்துறாங்க... இதனால,பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறதுல காலதாமதம் ஏற்படுறதும் இல்லாம, அவங்க அலைக்கழிக்கப்படுறாங்க...''அதுலயும், தாசில்தார்கள் பலரும், 'சிண்டிகேட்' போட்டு செயல்படுறாங்க... இவங்க, கண்ணசைவு இல்லாம வருவாய் துறையில அணுவும் அசையாது... இதை பயன்படுத்தியே, பலரும் கோடிக்கணக்குல சொத்துக்களையும் குவிச்சுட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை கச்சேரி முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.