பழுது பார்க்க கொடுத்த பைக்கை திருடிய வாலிபர்
கொடுங்கையூர், நவ. கொடுங்கையூர், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 25; தனியார் வங்கி துணை மேலாளர். கடந்த 10ம் தேதி, கிருஷ்ணா தெரு அருகே, திடீரென இவரது கே.டி.எம்.200 டியூக்' பைக் பழுதானது.அருகேயுள்ள ஜாவித் உசேன் என்பவரது மெக்கானிக் கடையில், பழுது பார்க்க விட்டுச் சென்றார். அந்த கடையில் பணிபுரிந்த, காரைக்காலைச் சேர்ந்த வாசிம் அக்ரம் பைசல், 27, என்பவர், இந்த 'பைக்'கை எடுத்துச் சென்றுள்ளார்.அதன் பின், அவர் திரும்பவில்லை. இதுகுறித்து பைக் உரிமையாளர் பாலாஜி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், பைக்கை திருடிச் சென்ற வாசிம் அக்ரம் பைசலை, நேற்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.