உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண்ணிடம் அத்துமீறிய டிராவல்ஸ் ஓனர் கைது

பெண்ணிடம் அத்துமீறிய டிராவல்ஸ் ஓனர் கைது

புழல், நபுழல், காவாங்கரை மாரியம்மாள் நகரில், ஸ்ரீ எஸ்.எம்.எஸ்.டிராவல்ஸ் நிறுவன முன்பதிவு மையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென் மாவட்டங்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிறுவனத்தை செங்குன்றம், கிரான்ட்லைன் பகுதியைச் சேர்ந்த கட்டேரி ராஜா, 45, என்பவர், 32 பேருந்துகளை வைத்து இயக்கி வருகிறார். இந்த பேருந்து முன்பதிவு நிறுவனத்தில், செங்குன்றத்தைச் சேர்ந்த, 26 வயது பெண், வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக வேலை பார்த்து வந்த பெண்ணிடம், உரிமையாளரான ராஜா, ஆபாச வார்த்தைகளால் பேசியும், பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.பொறுமை இழந்த அப்பெண், இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று, கட்டேரி ராஜாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ