உதயநிதி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
உதயநிதி பிறந்தநாள் விழாநலத்திட்ட உதவி வழங்கல்தர்மபுரி, டிச. 10-தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. இதில், பொ.மல்லாபுரம், பையர்நத்தம், வெங்கட சமுத்திரம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு, பேனா பென்சில் நோட்டு புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் குக்கல்மலை பகுதியில், 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி, சேலைகள், அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு மதிய உணவு, குருபரஹள்ளி, ராமியம்பட்டி ஒடசல்பட்டி கூட்ரோடு ஆகிய கிராமங்களில், கட்சி கொடி ஏற்றி, அன்னதானம் ஆகியவற்றை மாவட்ட செயலாளர் பழனியப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் சத்யமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், முத்துக்குமார், நெப்போலியன், சிவப்பிரகாசம், நகர செயலாளர்கள் கவுதமன், ஜெயச்சந்திரன், பேரூராட்சி தலைவர்கள் மாரி, சாந்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தாமோதரன், நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.