உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  அம்மனுாரில் கான்கிரீட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

 அம்மனுாரில் கான்கிரீட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

செய்யூர்: அம்மனுார் ஊராட்சியில் சாலை வசதியின்றி 20 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதால், கான்கிரீட் சாலை அமைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அருகே அம்மனுார் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அம்மனுார் காலனி பகுதியில் உள்ள நடுத்தெருவில், பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்கி சகதியாக மாறுவதால், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சாலை அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதுவரை நடவடிக்கை இல்லாததால் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அம்மனுார் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !