உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / இளைஞரை தாக்கி மொபைல் போன் பறிப்பு

இளைஞரை தாக்கி மொபைல் போன் பறிப்பு

சென்னை:காரப்பாக்கத்தில், பணியிலிருந்த வடமாநில நபரிடம் மொபைல் போன் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, காரப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தட பணித்தளத்தில், நேற்று அதிகாலை பீஹாரைச் சேர்ந்த ஹர்சிங், 18, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மூவர், கட்டையால் அவரை தாக்கி, அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். காயமடைந்த ஹர்சிங்கை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஹர்சிங்கிற்கு, தலையில் 6 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து, கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை