தகவல் சுரங்கம்
நிமோனியா தினம்உலகில் 2019ல் 6.72 லட்சம் குழந்தைகள் உட்பட 25 லட்சம் பேர் நிமோனியாவால் உயிரிழந்தனர். 2021ல் ஏற்பட்ட கொரோனா வைரசால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. நிமோனியா நோய் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 12ல் உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள், முதியோர், காற்றுமாசு பகுதிகளில் வசிப்போரை அதிகமாக பாதிக்கிறது. நுரையீரலை பாதித்து சுவாச பாதிப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளிட்ட காரணிகளால் உருவாகிறது.