தகவல் சுரங்கம்
வார்த்தை இல்லா தேசிய கீதம்
ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய கீதம் இருக்கும். இது தேசப்பற்றை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தேசிய கீத பாடல், வரிகளுடன் அமைந்திருக்கும். இந்நிலையில் வார்த்தைகளே இல்லாத தேசியகீதம் உள்ள நாடுகளும் உலகில் உள்ளன. ஐரோப்பியநாடான ஸ்பெயினில், 'மார்ச்சா ரியல்' என அழைக்கப்படும் அதன் தேசிய கீதத்தில் அதிகாரப்பூர்வ பாடல் வரிகள் கிடையாது. அதே போல ஐரோப்பிய நாடுகளான போஸ்னியா -ஹெர்சகோவினா, சான் மரினோ, கோசோவோ ஆகிய நாடுகளின் தேசிய கீதத்திலும் வார்த்தைகள் இல்லை.