தகவல் சுரங்கம்
சைகை மொழி தினம்உலகில் 7 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. 1951 செப். 23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிப்படுத்துவது ஆகும். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.