தகவல் சுரங்கம்
நடனம், நிலநடுக்க நினைவு தினம்
சர்வதேச தியேட்டர் நிறுவனம், யுனெஸ்கோ இணைந்து ஏப்.29ல் உலக நடன தினத்தை கடைபிடிக்கின்றன. நடனம் ஒரு சிறந்த கலை. இத்திறமையை ஊக்குவிக்கும் விதமாக ஏப்.29ல் உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் ஜான் ஜார்ஜ், பாலே நடனத்தில் சிறந்து விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் (ஏப். 29) உலக நடன தினமாக தொடங்கப்பட்டது.* ஐ.நா., சார்பில் ஏப்.29ல் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1900ல் இருந்து 12 பெரிய நிலநடுக்கங்களில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.