உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

'டெபாசிட்' திரும்ப கிடைக்குமா...லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 34 1(ஏ) படி, வேட்புமனுவுடன் ரூ. 25 ஆயிரம் (எஸ்.சி., / எஸ்.டி., வேட்பாளர்களுக்கு ரூ. 12,500) டெபாசிட் கட்டணமாக செலுத்த வேண்டும். அதுபோல சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுவுடன் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் (எஸ்.சி., / எஸ்.டி.,க்கு ரூ. 5 ஆயிரம்) கட்டணமாக செலுத்த வேண்டும். இதை திரும்பபெற தொகுதியில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் 'டெபாசிட்' தொகை இழந்ததாக அறிவிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !