தகவல் சுரங்கம் : பெரிய போக்குவரத்து நெரிசல்
தகவல் சுரங்கம்பெரிய போக்குவரத்து நெரிசல்உலகின் பெரிய போக்குவரத்து நெரிசல் சீனாவில் நடந்தது. 2010 ஆக. 14ல் தலைநகர் பீஜிங் - திபெத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசல் 12 நாட்களுக்கு நீடித்தது. 100 கி.மீ., துாரத்துக்கு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்திருந்தன. மக்கள் 12 நாளும் வாகனத்திலேயே தங்க நேர்ந்தது. தற்காலிக கூடாரம் ஏற்படுத்தப்பட்டது. தற்காலிக கடைகள்உருவாகின. மங்கோலியாவில் இருந்து பீஜிங்கிற்கு நிலக்கரி, கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த பெரிய கன்டெய்னர் வாகனம் நடுவழியில் பழுதடைந்ததே இதற்கு காரணம். ஆக. 25ல் போக்குவரத்து சீரானது.