தகவல் சுரங்கம் : பெருங்கடல், மூளைக்கட்டி தினம்
தகவல் சுரங்கம்பெருங்கடல், மூளைக்கட்டி தினம்பூமியில் 70 சதவீதம் கடல் தான் உள்ளது. பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப் படுகிறது. * மூளையின் எந்தப் பகுதியிலும் அசாதாரண செல்கள் உருவாகும்போது மூளைக்கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 8ல் உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.