தகவல் சுரங்கம் : நெதர்லாந்தின் வெனிஸ்
தகவல் சுரங்கம்நெதர்லாந்தின் வெனிஸ்இத்தாலியின் வெனிஸ், உலகின் மிதக்கும் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு தெருக்களுக்கு பதிலாக கால்வாய்கள் தான் இருக்கும். 118 தீவுகள் உள்ளன. இவை கால்வாய், சிறிய பாலங்களால் இணைக்கப்பட்டிருக்கும். படகில் தான் செல்ல வேண்டும். இதுபோல நெதர்லாந்தில் கீத்துார்ன் என்ற கிராமம் உள்ளது. இங்கும் கால்வாய்கள் உள்ளன. கடக்க சிறிய பாலங்கள் உள்ளன. படகு தான் பிரதான போக்குவரத்து. சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது 'நெதர்லாந்தின் வெனிஸ்' என அழைக்கப்படுகிறது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 120 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.