உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக பாம்புகள் தினம்

தகவல் சுரங்கம் : உலக பாம்புகள் தினம்

தகவல் சுரங்கம்உலக பாம்புகள் தினம்உலகில் 3500 வகை பாம்புகள் உள்ளன. இவை சுற்றுச் சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்விடம் அழிதல், பருவநிலை மாற்றம் காரணமாக இவை அழிவை சந்திக்கின்றன. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 16ல் உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் நீளமான விஷப்பாம்பு 'கிங் கோப்ரா'. பாம்புக்கு வெளிப்புற காது கிடையாது. அதன் தாடையில் உள்ள எலும்புகள் ஒலியை உணரச்செய்கிறது. அதேபோல நாக்கின் மூலம் தண்ணீர், காற்று, நிலத்தில் உள்ள வாசனையை உணர்கிறது. இதனால் தான் எப்போதும் நாக்கை வெளியே நீட்டியவாறு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ