தகவல் சுரங்கம் : நீண்ட காலம் தூங்கும் உயிரினம்
தகவல் சுரங்கம்நீண்ட காலம் தூங்கும் உயிரினம்நத்தைகள் நிலம், கடல், நன்னீர்களில் வாழும். இதில் பல வகைகள் உள்ளன. நிலப்பரப்பில் வாழும் நத்தைகள் எப்போதும் ஈரப்பதமான சூழலையே விரும்பும். வெப்பம், வறட்சியான சூழலில் இருந்து தப்பிக்க நீண்டகாலம் (மூன்றாண்டு வரை) துாங்கும் பழக்கத்தை கொண்டது. இதற்கு முதுகெலும்பு இல்லை. ஆயுட்காலம் 3 ஆண்டுகள். சில 10 ஆண்டுகள் வாழும். நீளம் 30 செ.மீ., வரை வளரும். விநாடிக்கு 0.5 - 0.8 இன்ச் வேகத்தில் மெதுவாக நகரும். இது நிற்காமல் சென்றால் ஒரு கி.மீ., துாரம் செல்ல ஒரு வாரம் ஆகும். தன் உடல் எடையை விட, 10 மடங்கு எடையை துாக்கும் திறன் பெற்றவை.