தகவல் சுரங்கம்: சிறுகோள் தினம்
பூமி, செவ்வாய் போன்ற கோள்கள், சூரியனை சுற்றுவது போல, 'அஸ்ட்ராய்டு' எனும் சிறுகோள்களும் சுற்றி வருகின்றன. இவை கோள்களை விட சிறியது. 1908 ஜூன் 30ல் ரஷ்யாவின் துங்குஸ்கா பகுதியில் சிறுகோள் கீழே விழுந்தது. இதனால் 2150 சதுர கி.மீ., சுற்றளவு பரப்பளவில் இருந்த 8 கோடி மரங்கள் அழிந்தன. இந்நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 30ல் உலக சிறுகோள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுகோள்களில் இருந்து பூமியை பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கம். விண்வெளியில் 10 லட்சம் சிறுகோள்கள் சுற்றுகின்றன.