தகவல் சுரங்கம் : அணு ஆயுத ஒழிப்பு தினம்
தகவல் சுரங்கம்அணு ஆயுத ஒழிப்பு தினம்உலகில் 12,241 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆபத்தை விளைவிக்கும் இவற்றை கைவிட வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 26ல் 'அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் சர்வதேச தினம்' கடைபிடிக்கப்படுகிறது. அணு ஆயுதத்தின் பாதிப்புகளை விளக்கும் விதமாகவும், அதை மக்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆக., 6ல் அமெரிக்கா உலகின் முதல் அணுகுண்டை வீசியது.