தகவல் சுரங்கம்:பல் மருத்துவர் தினம்
உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று பற்கள். உணவை மெல்லுதல், பேசுதல், புன்னகை உட்பட பல வழிகளிலும் பயன்படுகிறது. பல் சுத்தம், வாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பல் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 6ல் தேசிய பல் மருத்துவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 350 கோடி பேர் வாய்வழி தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தில் பல் மருத்துவம் முன்னேற்றமடைந்துள்ளது. பாதிப்புகளுக்கு ஏற்ப சிகிச்சை முறை உள்ளது. பிரச்னைக்கு துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.